யாழில். மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார்.
தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கோரினர்.
இச்செயலமர்வில் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண, பணிப்பாளர் ரி. ஜி. லக்ஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 வீதி சமிக்கைகளே உள்ளதாகவும், மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ் விடயம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அரோஷா வித்திய பூஷண வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் அ. கிருபாகரன், வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.