துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா
என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.