வடமராட்சியில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

வடமராட்சியில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

யாழ் வடமராட்சி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி, கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை, பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல் வழியாக கொண்டுவரப்பட்ட 85கிலோவுக்கு அதிகமான கஞ்சா போதைப் பொருள், ராணுவப் புலனாய்வுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் கட்டைக்காடு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவை நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் கட்டைக்காடு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This