18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 02 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி, பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரெப் இசை பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

 

 

Share This