வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்

30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இதன்போது இரு நாடுகளுக்குமான உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான அழைப்பின் போது எரிசக்தி உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களில் 30 நாள் இடைநிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டார், ஆனால் முழுமையான போர் நிறுத்தத்தை நிராகரித்தார்.
இந்நிலையில் உக்ரைன் குறித்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் தொடரும் என அமெரிக்க தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனும் ரஷ்யாவும் தலா 175 கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கு புடினும் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளனர்.