சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே
அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு 18 வீத பெறுமதி சேர் வரியும் 2.5% வரி விதிக்கப்படுகிறது.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி சந்தைக்கு வெளியே 220 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது.

எனவே சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதனூடாக நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

சீனி வரியில் ஏமாற்றியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.

Share This