140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் ராகுல் காந்தி மிகவும் தோல்வியுள்ள தலைவர் – பாஜக

140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவர் ராகுல் காந்தி என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக மோசமான தலைவர் என்பதை உணர்வார் என்றும் சுதான்ஷு திரிவேதி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கட்சியினரை சந்தித்துப் பேசியிருந்தார்.
குஜராத்தில் காங்கிரசில் இருந்துகொண்டு, பதவிகளை வகித்துக்கொண்டு பாஜகவுக்காக உழைக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி இவ்வாறு கூறியுள்ளார்.
140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவரான ராகுல் காந்தி குஜராத்தில் கட்சித் தொண்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி வெற்றிக்கான மந்திரத்தை கற்பித்துள்ளார்.
அவரின் பேச்சுக்கள் காங்கிரசின் அவலநிலையையும், மோசமடைந்து வரும் அவரின் மனநிலையையும் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியலமைப்பு நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களைத் தொடர்ந்து குறை கூறிய பிறகு, தற்போது தனது சொந்த கட்சியினரையே குறை கூறத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தலைவர் தனது சொந்தக் கட்சியினரையே இப்படிப் பகிரங்கமாக அவமதிக்கும் உதாரணத்தை ஒருபோதும் காண முடியாது. ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக மோசமான தலைவர் என்பதை அவர் உணர்வார்.
ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, காங்கிரசின் நிலை மோசமடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்இ