திருச்சி மற்றும் இலங்கை இடையே தினசரி நேரடி விமான சேவை – இண்டிகோ அறிவிப்பு

இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கை இடையே தினசரி நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் தினசரி நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், வணிகம், சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்காக விசேட அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விமானம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் தெரிவித்துள்ளது.