இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எகஸ் தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான காணொளி சந்திப்பின் போது சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குமான அவசியம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை தொடர்ந்தும் உறுதிப்படுத்திய அவர் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

Share This