சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

நாடளாவிய ரீதியில் நாளை (6) நடத்த திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார நிபுணர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
வரவு செலவு திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையில் கொடுப்பனவுகளைக் குறைப்பது அவர்களின் தொழிலையும் பாதிக்கும் என்று குற்றம் சுமத்தி, இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
எனினும், இன்று (5) பிற்பகல் சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, வேலைநிறுத்தம் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.