இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி

இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி

இராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்தார்.

இந்நிலையில், அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தைக்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் அமைதியை அதிகம் விரும்புபவர்கள். டிரம்பின் பின்னால் உறுதியாக நிற்போம்” என அவர் எக்ஸ் தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நிறுத்த உக்ரைன் தயாராக உள்ளது. உக்ரைன் ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், குண்டுகள் அல்லது பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தாது.

இருப்பினும், ரஷ்யாவும் இந்த விடயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம் என்றும், அது உக்ரைனுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்கள் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிந்ததது.

அமெரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேறிய உக்ரைன் ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்த நிலையில், அவருக்கு அமோக வரவேற்று அளிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

எவ்வாறாயினும், தற்போது அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Share This