உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை – உறுதிப்படுத்திய அமைச்சர்

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை – உறுதிப்படுத்திய அமைச்சர்

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயற்படுவதை நிறுத்திவிடுகின்றன.

நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும். நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.

மோசடிகளைத் தடுக்க வலுவான விதிமுறைகள் கொண்டுவரப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This