இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், முந்தைய நெருக்கடியின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This