மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா

யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை(01.02.2025) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த பலத்த மழைஷ காரணமாக யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முற்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக யால சஃபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.