அமெரிக்க , பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் – ட்ரம்ப்

அமெரிக்க , பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் – ட்ரம்ப்

அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மற்றம் பிரித்தானிய பிரதமர் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்தே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ட்ரம்ப் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றார்.

இதேவேளை, ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This