பத்தேகம பகுதியில் இடம்பெற்ற மோதலில் இரு சகோதரர்கள் பலி

பத்தேகம பகுதியில் இடம்பெற்ற மோதலில் இரு சகோதரர்கள் பலி

பத்தேகம – மத்தேவில மிரிஸ்வத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நேற்று (27) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அதேப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கராபிட்டிய மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This