ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை மற்றும் அளவு போன்ற தகவல்கள் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் அறிவிக்க முடியும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி தாய்லாந்தில் இருந்து நேற்றுமுன்தினம் (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தாய்லாந்தில் இருந்து அதிகளவான டபள் கெப் வண்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தததுடன், இந்த வாகனங்களின் விலை 245 முதல் 255 இலட்சம் ரூபா வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களின் விலை அதிகமாக உள்ள போதிலும் முன்பதிவுகளுக்கு மக்கள் மத்தியல் பெரும் கேள்வி நிலவுவதாகவும்
வாகனங்களை கொள்வனவு செய்வோர் விரைவில் பதிவு செய்யுமாறும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.