பொது மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் பொது மருந்தகங்களை நிறுவுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம்

மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக சுகாதார அமைச்சின் மீதான மக்களின் நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவதும் பழமையானதுமான அரச மருந்தகமான கொழும்பு 07 அரச மருந்தகத்தின் 51 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
மீண்டும் அதே தவறு இடம்பெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“உங்கள் ஊருக்கு மருந்தகம்” என்ற திட்டத்தின் கீழ் பொது மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் பொது மருந்தகங்களை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.