வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன்படி, ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தீப்தி சுமனசேன தெரிவித்தார்.
வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.