ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே மோதல் – மூவர் வைத்தியசாலையில்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை தீர்க்கச் சென்றபோது, அதே பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.