மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெலம்புய, வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.