கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் சாரதியையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 

Share This