மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் உத்தியோகப்பூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளனர்.
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவு வெளியுறவு செயலாளர் பாத்திமத் இனயாவும் கலந்து கொண்டார்.