இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இப் பதவியில் இருந்த ராஜீவ் குமார் நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஓய்வு பெற்றதையடுத்து ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் 26 ஆவது தேர்தல் ஆணையாளராக இன்று புதன்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். இவர் 2029 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி வரையில் பதவிக்காலத்தில் நீடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.