குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும், ஒரு குழுவினருக்குமிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14.02.2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்றைய தினம் (17.02.2025) இரவு முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் முறிப்பு பகுதியை சேர்ந்த 47, 52, 21 வயதுடையவர்கள் . இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தபட இருக்கின்றார்கள்.
(பாலநாதன் சதீசன்)