முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் வயலில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் மீது அம் மாநில அரச பேருந்து மோதியுள்ளது. இவ் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் சுத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பில் செப்ரோலு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.