சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

பின் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றவருக்கு தலைநகர் வொஷிங்டனில் அரசு சார்பிலும் அங்கு வாழ்ந்துவரும் இந்தியர்கள் சார்பிலும் சார்பிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசியப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர், குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த மோடி நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட்டு, நள்ளிரவில் நாடு திரும்பியுள்ளார்.

Share This