அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கத் திட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்று திரட்டி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.