டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் நாட்டின் 74 வைத்தியசாலைகளில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.