வல்வெட்டித்துறையில் 75 கிலோ கஞ்சா மீட்பு

வல்வெட்டித்துறையில் 75 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வடமராட்சி , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் கஞ்சா போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கஞ்சா பொருட்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டு கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ள பொலிஸார் , கஞ்சாவை பதுக்கி வைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, கடந்த வாரம் வடமராட்சி மூர்க்கம் கடற்கரை பகுதியில் 384 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் ஆழியவளை பகுதியில் 84 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்ட போதிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This