நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – எழுவர் கைது

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – எழுவர் கைது

மிரிஹான பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்பள்ளி ஒன்றின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தினத்தில், சிறுவன் உட்பட குழு ஒன்று, ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் விருந்தகத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில், நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் குறித்த சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னதாகவே உயிரிழந்தமை தெரியவந்தது.

சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றதுடன், களுபோவில வைத்தியசாலையின் சட்ட மருந்து அதிகாரி சடலம் தொடர்பாக தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கைதாகியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )