கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில்  ஒருவர் கைது

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இறக்குமதி செய்யப்பட்ட 9400 சிகரெட்டுகள் அடங்கிய 47 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

Share This