சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கடற்படை முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு,மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் பருத்தித்துறை ஆகிய கடற்பரப்புகளில் இவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய நூற்று பதினேழு சட்டவிரோத வலைகள், ஒன்பது டிங்கி படகுகள், மூவாயிரத்து எண்ணூற்று எட்டு கடல் அட்டைகள், உயர் தொழில்நுட்ப மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோத வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, , முல்லைத்தீவு, மாமுனை, பருத்தித்துறை மற்றும் வாகரை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Share This