மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 பேர் கைது

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 பேர் கைது

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 760 பேரும், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 290 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 172 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 21 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3736 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This