26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி – 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

தென் கொரியாவில் இடம்பெறும் 26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.
கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் இந்த போட்டியில் ஜப்பானின் கென்டாரோ சாடோ 45.50 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.