அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக 24 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் திடீர் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 25 பேர் வரை காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காணாமற் போனோரின் எண்ணிக்கை
உறுதிப்படுத்தப்படவில்லை.
சுதந்திர தினத்தன்று நடந்த இந்த துயரச் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ம்ப் அதிர்ச்சியூட்டுவதாகவும் பயங்கரமானது என்றும்
தெரிவித்தார்.