டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு

டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This