2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – வெளியான விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 08 ஆம் திகதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து குறித்த தொடரை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாதம் நீடிக்கும் இந்த தொடரானது இந்தியாவிலுள்ள 05 மைதானங்களிலும், இலங்கையிலுள்ள 02 மைதானங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் தொடரின் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.