2025 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

2025 உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகவுள்ள நிலையில்
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இன்று முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை
உயர்தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சார்த்திகளில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு
வர வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This