நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 2000 அதிகாரிகள் கடமையில்

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 2000 அதிகாரிகள் கடமையில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிதில் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்வதே சோதனை நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சம்மில் முத்துக்குடா தெரிவித்தார்.

நாட்டில் அண்மைக்காலமாக பெய்த பலத்த மழை, உணவு மற்றும் பானங்கள் மூலம் பரவும் பல நோய்களைக் கண்டறிய வழிவகுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்..

 

Share This