யாழ் மாவட்டத்தில் 17 வயதுச் சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

யாழ் மாவட்டத்தில் 17 வயதுச் சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This