இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன.

இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு, தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் மருத்துவமனையில் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் ஜபாலியா, பெய்த் லாஹியா, பெய்த் ஹனூன் பகுதிகளிலுள்ள மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.

சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக இப் பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் ஐக்கிய நாடுகள் அமைப்பால் நிவாரண பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This