வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு

வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு

வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் வடக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்போர்ன் வீதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, மெட்ரோ பொலிஸார்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இஸ்லிங்டனில் உள்ள செயிண்ட் மேரி மாக்டலீன் பாடசாலைக்கு அருகில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ள தலைமை கண்காணிப்பாளர் ஜேசன் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )