24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

நேற்று (18) காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துகளில் ஏழு விபத்துகள் நேற்று முன்தினம் (17) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துகள் வாரியபொல, சேருநுவர, கஹடகஸ்திகிலிய, கொச்சிக்கடை, ஹன்வெல்ல, தலாவ, நாகொட, கரடியனாறு, கடுவெல, மாதம்பே, புலதிசிபுர, பல்லேவெல, வென்னப்புவ, ஓபநாயக்க, உப்புவெளி ஆகிய பகுதிகளில் நடந்துள்ளன.

இந்த விபத்துகளில் எட்டு விபத்துகள் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் என்பதுடன் ஆறு பாதசாரிகள் பல்வேறு வாகனங்களில் மோதி உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி விபத்தில் பயணித்த ஒரு பயணியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This