போதைப்பொருள் ஒழிப்புக்கான பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் ஒரே நாளில் 1,115 சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கான பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் ஒரே நாளில் 1,115 சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கான ” முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், 531 கிராம் ஐஸ் 754 கிராம் கஞ்சா, 08 கிலோ 953 கிராம் போதை மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This