அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்பாது காணாமற்போனரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This