வேட்பாளர்கள் 08 பேர் கைது

வேட்பாளர்கள் 08 பேர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலயைில் கடந்த 24 மணித்தியாலங்களில் 08 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐந்து ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பான நான்கு (04) முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 15 முறைப்பாடுகளையும் இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 03 திகதி முதல் இன்று வரை தேர்தல் தொடர்பில் 568 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அவற்றில் 116 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை தொடர்பானவை என்றும் மேலும் 452 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 54 வேட்பாளர்களும் 204 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 46 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This