அபாயமிக்க மரங்களை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள்

அபாயமிக்க மரங்களை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள்

அபாயமிக்க மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது.

பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மரங்கள், கிளைகள் முறிந்து வீழ்ந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் அதிகமானவை தனியார் இடங்களை அண்மித்த பகுதிகளில் பதிவானதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்தது.

விஹாரமஹாதேவி பூங்காவில் மரம் முறிந்து வீழ்ந்த 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This