ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு முத்திமிட்ட இஸ்ரேலிய பணய கைதி – வைரலாகும் காணொளி

இஸ்ரேலிய பணய கைதி ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருவருக்கு நெற்றியில் முத்தம் இட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் மேலும் 06 பணய கைதிகளை நேற்று விடுவித்தது. இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடுதலை செய்யப்படுவதற்குமுன் ஒமர் ஷெம் டம் மேடையில் ஏற்றப்பட்ட போது, காணொளி பதிவு செய்த ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த நபர், ஒமர் ஷெம் டம் இடம் சென்று அருகில் நின்றுகொண்டிருக்கும் ஆயுதக்குழுவினர் நெற்றியில் முத்தமிடும்படி கூறுவது போன்ற காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அறிவுறுத்தலுக்கமைய ஒமர் ஷெம் டம் முத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.