ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் பலி

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் பலி

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் புகைப்படம் எடுப்பதற்கு முயற்சித்த நிலையில் தவறி விழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

 

Share This